திருச்சி பஞ்சபூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே அங்காயி என்பவரின் பெயரில் 26 சென்ட் நிலம் உள்ளது. அங்காயின் மறைவிற்குப் பிறகு அவரது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளான சரவணன் மாரிமுத்து, மஞ்சுளா மற்றும் பெரியப்பா மகன்களான ராம்குமார், கனகவல்லி ஆகியோருக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திமுக நிர்வாகிகளான பெரியசாமி, சன்னாசி ஆகிய இருவரும் இடத்தை விலைக்கு கேட்டுள்ளனர். சரவணன் மற்றும் அவர்கள் சகோதரர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமணம் போன்ற காரியங்களுக்கு பிற்காலத்தில் இடம் தேவை என கூறிய இடத்தை விற்க மறுத்து விட்டனர். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தங்களின் இடத்தில் அத்துக்கள் ஊன்றும் பொழுது திமுக நிர்வாகிகள் மற்றும் குண்டர்கள் அத்துக்களை பிடுங்கி எரிந்து இது எங்களுக்கு சொந்தமான இடம் எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். இது சம்பந்தமாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல்துறை ஆணையர் மற்றும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரிடம் மனு அளித்தனர் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் கடந்த வாரம் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்து பார்வையிட வந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் இன்று காலை இவர்களது இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திமுக நிர்வாகிகள் கல் ஊன்றியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேட்டி அளிக்கையில்:-திருச்சி பஞ்சபூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே எங்களது பாட்டி அங்காயிக்கு சொந்தமான 26 சென்ட் இடம் உள்ளது இதன் மதிப்பு 5 கோடி என கூறப்படுகிறது இந்நிலையில் எங்களது ஊரை சேர்ந்த திமுக நிர்வாகிகள் எங்களது இடத்தை எங்களுக்கு தெரியாமல் போலி பட்டா மூலம் பெயர் மாற்றம் செய்து வேறு ஒருவருக்கு விற்று விட்டனர் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அமைச்சரிடமும் முதல்வரிடமும் புகார் அளித்தோம் இந் நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடைசியாக குடும்பத்துடன் மாவட்ட ஆட்சி தலைவரை நம்பி வந்துள்ளோம் எங்களது இடத்தை எங்களுக்கு மீட்டு தரவில்லை என்றால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்