கனரா வங்கி சார்பில் டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சென்னை கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் ஸ்ரீநாயர் அஜித் கிருஷ்ணன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி கல்வி உதவித் தொகைகளை மாணவிகளுக்கு வழங்கினார். ஆதலைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இந்த விழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த ஆதி திராவிட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கனரா வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அரசு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 21 சதவீதம் விலை ஏற்றம் நடந்திருக்கிறது அதுமட்டுமல்லாது காகிதம் என்று வரும் பொழுது 63% உயர்ந்துள்ளது ஒவ்வொரு புத்தகத்திற்கும் அட்டை போடுகிறார்கள் அதற்கு 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விலை ஏற்றம் நடைபெற்று வந்தது ஒவ்வொரு மூளை பொருட்களுக்கும் ஏற்றது போல் விலை ஏற்றம் லாப நஷ்டம் பார்க்காமல் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையற்றத்தால் ஏழை எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குறிப்பாக அரசு பள்ளியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லாத பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் இலவசமாக நூலகங்கள் திறக்கப்பட்டு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ செல்வங்களுக்காக தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதில் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்