திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெற்ற சுதந்திரத்தை இன்றளவும் பேணி காப்பது பெரியோர்களே இளைஞர்களே என்ற தலைப்பில் பட்டிமன்றம் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த பட்டிமன்றத்திற்கு தேர்வு நெறியாளர் முனைவர் வித்யா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி தலைமை தாங்கினார். இந்த பட்டிமன்றத்தின் நடுவராக கல்லூரி செயலரும் மற்றும் தாளாளருமான வெங்கடேஷ் உரையாற்றினார். பெரியவர்களே என்ற தலைப்பில் தமிழ் துறை உதவி பேராசிரியர் சதீஷ்குமார், வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவி அபிநயா, தேர்வு கட்டுப்பாட்டகம் தரவு தட்டச்சு பணி பிருந்தா, வணிக மேலாண்மை முதலாம் ஆண்டு மாணவன் அஜய் கிருஷ்ணன், தமிழ் துறை இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி சாதனா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதேபோல் பெற்ற சுதந்திரத்தை இன்றளவும் பேணி காப்பது இளைஞர்களே என்ற தலைப்பில் தமிழ் துறை உதவி பேராசிரியர் சரண்யா, ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சித்ரா, உயிரியல் தொழில்நுட்பவியல் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி நித்யா, வணிக வேளாண்மை மாணவி பார்வதி, ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவி சினேகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பட்டிமன்றத்தில் பங்கேற்ற உதவி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.