இந்திய மருத்துவ மன்றம் திருச்சி கிளை சார்பில் கொல்கத்தா ஆர்.ஜி ‌கர் மருத்துவமனை முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் அதனை கண்டித்தும் அதற்கு நியாயம் கேட்டு போராடும் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மருத்துவர்களுக்கு பணி நேர பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டி தேசம் தழுவிய மருத்துவ சேவை நிறுத்தம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி எம் ஜி ஆர் சிலை அருகே இந்திய மருத்துவ மன்றம் சார்பில் துணைத் தலைவர் மருத்துவர் குணசேகரன், முன்னாள் தேசிய துணை தலைவர் மருத்துவர் அஷ்ரப், கிளை தலைவர் மருத்துவர் சுரேந்திர பாபு, செயலாளர் மருத்துவர் முகேஷ் மோகன், பொருளாளர் தமிழ்ச்செல்வி மற்றும் திருச்சி கி.ஆ.பெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி செவிலியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர்.

இந்தப் பேரணியின் கோரிக்கைகளாக நடுநிலையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் மருத்துவக் கல்லூரியை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய கோரியும் மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை பாதுகாப்பு வளையமாக அறிவிக்க கூறியும் மருத்துவமனைகளின் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை அமைக்க கோரியும் மருத்துவக் கல்லூரிகளில் போதிய பாதுகாப்பு நபர்களை நியமிக்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் பெண் மருத்துவர்கள் இரவு நேரங்களில் பணி செய்தல் கண்டிப்பாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்