வருடம் தோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்கள் சார்பாக சிட்பண்ட்ஸ் டே இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீட்டு நிதி தின விழா கொண்டாட்டமாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பி எல் ஏ கிருஷ்ணா ஹோட்டலில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பைனான்சியர் மற்றும் சிட்பண்ட்ஸ் சங்கம் தமிழ்நாடு பைனான்சியர் மற்றும் சிட்பண்ட்ஸ் சங்கம் அகில இந்திய சிட்பண்ட்ஸ் சங்கம் இணைந்து நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியது அந்தக் கூட்டத்தில் சீட்டு தொழிலை மேம்படுத்துவது பற்றியும் மற்றும் ஜிஎஸ்டி வரி விலக்கு பெறுவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சிட்பண்ட்ஸ் டேவான இன்று திருச்சி தில்லை நகர் ஐந்தாவது கிராஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ வளத்தி சிட்பண்ட்ஸ் லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்து சீட்டு நிதி தின விழாவில் கேக் வெட்டி விவசாய கொண்டாடினர். விழாவிற்கு திருச்சி மாவட்ட பைனான்சியர் மற்றும் சிட்பண்ட்ஸ் சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ வளத்தி சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகியுமான பழனியப்பன் தலைமை தாங்கினார். மேலும் திருச்சி பலூரில் உள்ள அரசு பள்ளியில் இப்படிக்கு மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட்டு புத்தகம் வழங்கி வருங்காலத்தில் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சீட்டு நிதி தின விழாவை கொண்டாடியது.