திருச்சியில் பெற்றோர் இன்றி பாட்டியின் அரவணைப்பில் இருந்த 9 வயது சிறுமியை கடந்த 17-ம் தேதி மாயமானார் அடுத்த நாள் காலை மேலாடை இன்றி உடம்பில் காயங்களுடன் வந்த மாணவியை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேலும் இது குறித்து புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீஸ் சார் விசாரணை மேற்கொண்டதில் சின்ன ராஜா என்ற இளைஞன் அச்சிறுயை விடிய விடிய பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது தெரிய வந்தது. .உடனடியாக போலீசார் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் திருச்சி ம.க.இ.க, பு.ஜ.தொ.மு சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் அந்த இளைஞனை வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க வலியுறுத்தியும், அவனது சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க கோரியும், ஆதரவற்ற அச்சிறுமியை அரசே பொறுப்பெடுத்து காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும், அச்சிறுமி பெரியவர் ஆகும் வரை கல்விக்கு ஆகும் முழு செலவையும் அரசே ஏற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தலைமையில் தோழமை அமைப்பு மற்றும் ஜனநாயக பொது நல அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் மனுவாக கொடுத்தனர் . மேலும் மாவட்ட ஆட்சியர் உங்களின் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
தோழர்கள் அனைவரும் சிறுமியை துன்புறுத்திய காமவெறியனை தூக்கில் போட வலியுறுத்தியும், சிறுமியை அரசே பாதுகாக்க வலியுறுத்தியும், இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச திரைப்படங்கள், இணைய தளங்களை தடை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா, கலைக்குழு பொறுப்பாளர் லதா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் செந்தில், இணைச் செயலாளர் மணலிதாஸ், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சிவா, மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் செழியன், மாவட்ட பொருளாளர் கார்க்கி,வழக்கறிஞர்கள் சங்கர், ராஜன், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தரைக்கடை, ஆட்டோ சங்க தோழர்கள், அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள், குழந்தைகள் என திரளாக பங்கேற்றனர்.