திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியரும் தமிழ்த்துறை தலைவருமான பால் சந்திரமோகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிகள் தமிழ் துறை தலைவர் மீது புகார் தெரிவித்து கல்லூரியை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தனர்.இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு பேராசிரியர் பால் சந்திரமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் காவல்துறை கூடுதல் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான குழு இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது.இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் அமுமின் நிஷா அளித்த புகாரில் பேரில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பால் சந்திரமோகனை ஸ்ரீரங்கம் மகளிர் காவல்துறையினர் இன்று காலை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.