பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.
இதில் விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர்.
இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியில் உள்ள ஸ்ரீரங்கம் பரத நாட்டியாலையா நடன பள்ளியான கலை மாமணி ரேவதி முத்துசாமி அவர்களது இல்லத்தில் கிருஷ்ணர், ராதை, கோபிகளாகவும் குழந்தை கிருஷ்ணர் வேடம் அணிந்து மாணவிகள் கோகுலாஷ்டமியான கிருஷ்ண ஜெயந்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.