மது, போதை, ஆபாசம், தவறான உறவுகள் எனப் பெருகும் தீமைகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ந்தேதி முதல் 30 ந்தேதி வரை ஒழுக்கமே சுதந்திரம் எனும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்துள்ளது.இதுகுறித்து திருச்சியில் மாநிலஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: மது, போதை இன்று பெருகிக் கொண்டிருக்கிறது. குடி நோயாளிகளின் நாடாக இந்தியா மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆண், பெண் வேறுபாடின்றி மது அருந்துகின்றனர். இதனால் தீமைகள் பெருகிவிட்டன. நோய்கள் அதிகரித்துவிட்டன. விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என அனைத்துத் தீமைகளுக்கும் தாயாக மது இருக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துவது வேதனையளிக்கிறது. போதை நாட்டையே நாசப்படுத்திவிடும் என்பதால் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆகஸ்ட் 11 ஆம் நான் போதைக்கு எதிரான நாளாக அறிவித்து மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய முயற்சி அதே வேளையில் மதுவை தடை செய்யாமல் போதை இல்லா பாதை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும்.

 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முன்னெடுத்திருக்கும் இந்தப் பரப்புரையை முன்னிட்டு அரங்குக் கூட்டங்கள். பொதுக்கூட்டங்கள், வீதி முனைக் கூட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கம் நிகழ்வுகள், சமூக வலைதள விழிப்புணர்வு என செப்டம்பர் மாதம் முழுவதும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உள்ளோம். இது முஸ்லிம் பெண்கள் முன்னெடுக்கும் பரப்புரைதானே தவிர இது முஸ்லிம்களுக்கான, பெண்களுக்கா பரப்புரை அல்ல. ஓட்டு மொத்த மனித குலத்திற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைவோம். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டின் போது நிர்வாகிகள்பைரோஸ் , பரசத்து நிஷா, சிக்கந்தர், நவாஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *