திருச்சி மறை மாவட்டம் புனித மரியன்னை பேராளயத்தின் பங்கு பெரு விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்று விழா இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் தஞ்சை மறை மாவட்டம் மேதகு ஆயர் சகாயராஜ் கலந்துகொண்டு புனித கொடியை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.
முன்னதாக புனித மரியன்னை பேராலயத்தின் கொடியானது பேராயர்களால் புனிதப்படுத்தப்பட்டு ஊர்வலமாக பங்கு மக்களால் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை அருள்பணி சவரிராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை அருள் பணி சகாய ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு பிராத்தனை செய்து கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் புனித மரியன்னைப் பேராலய கொடியானது ஏற்றப்பட்டது. மேலும் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி சிறப்பு திருப்பலி ஆனது நடைபெறும்
அதனைத் தொடர்ந்து திருப்பளியின் நிறைவில் புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் தாங்கிய திருத்தேர் புனிதம் செய்யப்பட்டு திருத்தேர் பவனியானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் தேவாலயத்தை வந்து அடைகிறது. மேலும் இன்று நடந்த கொடியேற்று விழாவில் பொன்மலை கோட்டத் தலைவர் துர்கா தேவி மற்றும் பங்கு மக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.