தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி பிரஸ் கிளப்பில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் உள்ளது அது மத சிறுபான்மை ஆணையமா அல்லது மொழி சிறுபான்மை ஆணையமா என அமைசருக்கே தெரியவில்லை 4 மொழி சிறுபான்மை மக்களை உறுப்பினர் ஆக்கி மொழி சிறுபான்மை ஆணையம் அமைக்க இரண்டரை ஆண்டுகளுக்கு முன் முற்பட்டனர் ஆனால் அது நடைபெறவில்லை மதுரை தமுக்கம் மைதானத்திற்கு ராணி மங்கம்மா பெயர் வைக்க வேண்டும். திருச்சியில் ராணி மங்கம்மாள் சிலை வைக்க வேண்டும், திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு ராணி மங்கம்மாள் பெயர் வைக்க வேண்டும் சில வருடங்களாக சீமான் தெலுங்கர்கள் , நாயுடு கள் வந்தேறிகள் என கூறி வருகிறார் அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது ஆ.ராசா நாயுடுகள் ஜெய் ஶ்ரீராம் சொல்கின்றனர் என கூறுகிறார் ஏன் அவர் மொழி சிறுபான்மையினர் மீது பழி சொல்வது தான் வேலையா, அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்காத என கேள்வி எழுப்பினர்.
சீமான் அறுந்ததியர்களை மலம் அள்ளுபவர்கள் என் கூறி இழிவு படுத்துகிறார் இதனால் வன்முறை ஏற்படும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் சீமான் நீங்கள் வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார் அதை சொல்ல இவர் யார் சீமான் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கோரவில்லை என்றால் நீதி மன்றம் சென்று நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார். தமிழ்நாட்டில் 30 சதவீதம் தெலுங்கு மக்கள் உள்ளனர் 92 சட்டமன்ற தொகுதியில் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தி உண்டு குறிப்பாக நாயுடு மக்கள், 40 தொகுதிகளில் அதிகமாக உள்ளனர் எந்த கட்சி எங்களுக்கு குரல்கொடுக்க வில்லை 2026 இல் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டிய வேளையில் இறங்க உள்ளோம் என்றார்