விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த அப்துல்லாவாகிய நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன் எனக்கு இரு மகன்கள் உள்ளனர் முதல் மகன் இரண்டாம் வகுப்பும் ,இரண்டாவது மகன் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர் அதேபோல் எனது சகோதரர் மகனும் எனது உறவினர் மகன் ஆகிய நான்கு பேரும் எனது வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி மாலை 4 சிறுவர்களும் பயந்து அழுது கொண்டே என் வீட்டிற்கு வந்தனர் ஏன் இப்படி பயந்து அழுகுறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் படிக்கும் அந்த தனியார் பள்ளி செக்யூரிட்டி ரியாஸ் அலி என்பவர் எனது மகன் மற்றும் எனது உறவினர் மகன்கள் 4 பேரையும் பள்ளி வகுப்பறையில் வைத்து பூட்டியதாக கூறினர்.
இது குறித்து செக்யூரிட்டியிடம் கேட்க சென்ற போது தனியார் பள்ளியின் தாளாளரிடம் நீ ஏன் பிரச்சனை செய்தாய் அதனால் தான் உன் பிள்ளைகளை தனியறையில் வைத்து பூட்டினேன். மேலும் தாளாளர் சொல்லியதால் உன் பிள்ளைகளை பூட்டி அறையில் இருந்து வெளியே விரட்டி விட்டேன் என திமிராகவும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் மேலும் பயத்திலிருந்து மீலாத சிறுவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றேன் அங்கு மருத்துவர்கள் சிறுவர்களுக்கு மனநல ஆலோசகரிடம் கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தினார். என் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மகன்களை தனி ரூமில் வைத்து பூட்டிய செக்யூரிட்டி ரியாஸ் அலி மற்றும் தனியார் பள்ளி தாளாளர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். மேலும் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்ததாக தெரிவித்தனர்..