திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோ செல்ல தடை விதித்துள்ளது விமான நிலைய நிர்வாகம். மீறி செல்வோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.

AITUC மாநகர தலைவர் முருகேசன், CITU ஆட்டோ ரிக்ஷா சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை விக்கி, சமூக நீதிப் பேரவையின் நிறுவனர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிறுவனர் சம்சுதீன்,
மக்கள் உரிமை கூட்டணியின் மாவட்ட செயலாளர் காசிம், ஏர்போர்ட் பகுதி மக்கள் பிரதிநிதி பிலால், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் ஏர்போர்ட் கிளை தலைவர் கிருஷ்ண மூர்த்தி, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணலிதாஸ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் ஜீவா, ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் லதா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் செந்தில், மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மா.செ.உறுப்பினர் ஆதிநாரயணமூர்த்தி. SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் நியமத்துல்லா,
CPI கட்சியின் ஏர்போர்ட் பகுதி பொறுப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய நிர்வாகத்தை கண்டித்தும் , மத்திய அரசின் நிர்வாகப் போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்