அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உண்மை விசுவாசியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது.
அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
வந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு சால்வை அணிவித்து மலர் கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதேபோல் திருச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் திருச்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக் தலைமையில் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி நிர்வாகி கீதா ராமநாதன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் திருச்சி மாநகர் மாவட்ட ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு தலைமையில் ஐடி லிங்க் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதேபோல், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சசிகுமார், இணைச் செயலாளர் முல்லை சுரேஷ், அமைப்புச் செயலாளர் மனோகரன், உள்ளிட்ட அதிமுகவினர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.