திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் துவக்கமாக மேயர் அன்பழகன் தீண்டாமை உறுதிமொழி வாசிக்க கவுன்சிலர்கள் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .அவனைத் தொடர்ந்து மேயர் அன்பழகன் பேசுகையில்:- சென்ற மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பொற்கொடி மாமன்ற உறுப்பினர் செய்த செயல் வருந்தத்தக்க செயலாகும்.இது போன்ற செயல் மாமன்றத்தில் முன் உதாரணமாகி விடக்கூடாது. எனவே மாமன்ற உறுப்பினர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது பேசிய கவுன்சிலர் பொற்கொடி :- நான் வேறு எந்தவித நோக்கத்திலும் மேயருக்கு இனிப்பு வழங்கவில்லை இருந்தாலும் நான் அந்த செயலுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்கா தேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.