உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுகுணா லா அகாடமி இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது பயிற்சி வகுப்பில் ஏப்ரல் 1 1974 முதல் நடைமுறைக்கு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 இயற்றப்பட்ட crpc தற்போது Bnss என்று அழைக்கப்படும் பாரதிய நகரிக் சுரக்க்ஷ சன்ஹீத்தா 2023 ஆகஸ்ட் 11 2023 அன்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு 1/ 7 /2024 அன்று இந்தியா முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட bnss பற்றிய சட்டப் பயிற்சி வகுப்பு விழாவை மாண்புமிகு சார்பு நீதிபதி சிவக்குமார், (செயலாளர், மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு ) அவர்கள் துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் சுகுணா லா அகாடமி சுரேஷ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யோக கிருஷ்ணன் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் சசிகுமார் இணைச்செயலாளர் விஜய நாகராஜன் மற்றும் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் செய்திருந்தார்.