தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொன்மலை கோட்டம் துணை பொதுச்செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் பாபு, துணை கோட்ட செயலாளர் ராமசாமி, துணைத்தலைவர் பாலமுருகன், செயலாளர் வெங்கட் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக தொழிற்சங்க அங்கீகார தேர்தலை cwm நிர்வாகமே நடத்திட கோரியும், ரயில்வே போர்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும் முடக்கப்பட்ட 18 மாத டிஏவை உடனடியாக அரியர்ஸாக வழங்கிட கோரியும், எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமைத்திடக் கோரியும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட கோரியும்,
ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக் கோரியும், மத்திய அரசின் தனியார் மையத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சாம்சன், ஞானசேகர், சிதம்பரம் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.