சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி சேர்ந்த 37 வயதானவருக்கு சப்மியூகோசல் கட்டி லியோமியோமா என்னும் உணவுக் குழாய் கட்டியினால் அவதிப்பட்டுவந்தார். இதற்கு தீர்வாக தொரகாட்டமி எனப்படும் நெஞ்சுக்கூட்டை திறந்து உணவுக் குழாயில் இக்கட்டியை அகற்றப்படும் என வேறு மருத்துவமனையில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இப்பிரச்சினைக்கு எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றமுடியும் என்பதை உறவினர்கள் மூலம் அறிந்துகொண்ட அவர் சுவேதா மருத்துவமனை முதன்மை மருத்துவர் செந்தூரனை அணுகினார். டாக்டர் செந்தூரன் இந்தியாவிலேயே எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் வெகு சில மருத்துவர்களில் ஒருவர் மற்றும் இது போன்ற சவாலான மற்றும் புதிய சிகிச்சை முறைகளில் தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை இல்லாத பிற மாவட்டங்களில் இவ் அறுவை சிகிச்சை செய்வது முதல் முறையாக செய்வதாகும். இதைப்பற்றி இரைப்பை குடல் மற்றும் எண்டோஸ் கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் செந்தூரன் கூறுகையில் எண்டோஸ்கோப்பி மூலம் உணவுக் குழாயில் இருந்த 2 செமீ கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது. இதனால் நெஞ்சுக்கூட்டை திறந்து செய்ய வேண்டிய மாபெரும் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. எண்டோஸ்கோப்பி மூலம் செய்வதினால் தழும்பு இல்லாமல் வலி இல்லாமல் அடுத்த நாளே அவர் வீட்டிற்கு திரும்பினார். அவர் தின வேலைகளை செய்ய தொடங்கி விட்டார். டாக்டர் செந்தூரன் இவ் அறுவை சிகிச்சையை தமிழ் நாட்டில் முதல்முறையாக சென்னையில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.