திருச்சி கொடியாலம் கிராம ஊராட்சி புலிவலம் கிராமத்தில் உள்ள சாகுபடி நிலத்தில் மனித மல கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் மனித மல கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய கொடியாளம் கிராம ஊராட்சிக்குட்பட்ட புலிவலம் கிராமத்தில் உய்யக்கொண்டான் பாசன ஆற்றின் கரையோரம் உள்ள சர்வே எண் 235ல் 1 ஏக்கரில் நெல் வாழை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலத்தை தேர்வு செய்துள்ளனர். மேலும் இப்பகுதி உய்யக்கொண்டான் தரையோரம் உள்ளதால் பெருமழை வெள்ள காலங்களில் இப்பகுதியில் மூன்று அடி முதல் ஐந்து அடி வரை வெள்ளநீர் தேங்கும் அபாயம் உள்ளது இப்பகுதி முழுவதும் விவசாய நிலங்கள் சார்ந்த பகுதிகளாக உள்ளதால் இப்பகுதிக்கு அருகாமையில் உள்ள சுப்புராயன்பட்டி தெற்கு புலிவலம் வடக்கு புலிவலம் மற்றும் கரூர் மாவட்டம் சூரியனூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ளதால் இப்பகுதியில் இந்த மனித மல கழிவுகளை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க கூடாது என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்