வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் அண்ணா விளையாட்டரங்கம் ரேஸ் கோர்ஸ் சாலையில் வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை திருச்சி மாவட்ட வன அலுவலர் கீர்த்திகா மற்றும் டி ஆர் ஓ அருள்நிதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தொடங்கி ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக தந்தை பெரியார் ஈவேரா கல்லூரி, வழியாக சென்று ரேஸ்கோர்ஸ் சாலையில் நிறைவடைந்தது. இந்த வன விலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றது மேலும் இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட வன அதிகாரி கோபிநாத் செய்திருந்தார்.