திருச்சி முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் மழைக்கால நடவடிக்கைகள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியளிக்கையில் கூறியதாவது:- திருச்சியில் மழை வெள்ளம் குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தழ்வான பகுதி கண்டு அறிய பட்டு அனைத்து துறைஅலுவலர்களும்முன் எச்சரிக்கை நடவடிகையை மேற் கொண்டு உள்ளனர்.
2800 மின் கம்பம் தயார் நிலையில் உள்ளன, 1லச்சத்து 50ஆயிரம் மனல் மூட்டை மற்றும் 1 லச்சம் சாக்கு பை தாயர் நிலையில் உள்ளது. வெள்ளம் ஏற்பட்டால் 54 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி என கண்டறியப்பட்டுள்ளது திருச்சியை பொறுத்தவரை பெரும் வெள்ளத்திற்கு வாய்ப்பு குறைவு. பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ள நேரத்தில் முதல் கட்டமாக பொது மக்களுக்கு உதவுவதற்கு 4900 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். என தெரிவித்தார்.