தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள் கிளை மற்றும் திருவெறும்பூர் டுலைட் டான்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து வாழை திரைப்படத்தில் நடனமாடிய டுலைட் டான்ஸ் ஸ்டுடியோ மாணவர்கள் கிருபா ரோஹித், சதூஷன் , அவர்களுடன் பயணித்த விஜய் ஆகியோருக்கு பாராட்டு விழா, தங்கலான், தேவுரா திரைப்படங்களில் , குயிலி நாடகத்தில் நடித்து ,நடனமாடிய டுலைட் டான்ஸ் ஸ்டுடியோ மாணவி பிரின்சிக்குப் பாராட்டு விழா, தமிழக மெங்கும் நடைபெற்ற பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் அவர்களைப் பயிற்றுவித்த நடன ஆசிரியர் சத்யா மாஸ்டர்க்கு பாராட்டு விழா, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் வழங்கிய தமிழ் ஆளுமை விருது பெற்ற கவிஞர் இளங்குமரனுக்கு பாராட்டு விழா மற்றும் திருவெறும்பூர் டுலைட் டான்ஸ் ஸ்டுடியோவில் பெருந்தலைவர் காமராசர் நினைவு நூலக திறப்பு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கிளைத் தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். பெண்கள் கிளைத் தலைவர் சீத்தா, டுலைட் ஸ்டுடியோ நிறுவனர் விமலா, வனத்துறை அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருந்தலைவர் காமராசர் நினைவு நூலகத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைத்தலைவர் நந்தலாலா திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன்,பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பாலின் ஜெபசெல்வி கவிஞர் இளங்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கிளை செயலாளர் லாரன்ஸ் லூக் வரவேற்றார்.முடிவில் துணை செயலாளர் விஜய் வர்மா நன்றி கூறினார்.