TNCSC சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் ஆண்டு விழாவையொட்டி மாநில சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் யேசுதாஸ் தலைமை தாங்கிட, மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வீரராகவன் கலந்துகொண்டு சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பெயர் பலகை திறந்து வைத்தார். மேலும் 1972ஆம் ஆண்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு 10 பைசாவில் ஆரம்பித்த சுமைதூக்கும் பணிக்கு 47 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழக அரசு TNCSC நிர்வாகமும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று வரையில் பைசா கணக்கிலேயே மூட்டை ஒன்றுக்கு 1 ரூபாய் 55 பைசா வீதம் கூலி வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு வருடத்திற்கு பத்து பைசா வீதம் உயர்த்தி இருந்தால் கூட 47 ஆண்டுகளில் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் 70 பைசா வீதம் வழங்கி இருக்க வேண்டும் ஆனால் சரியான கூலியும் வழங்காமல் தொழிலாளர்களுக்கு பணியின் போது ஏற்படும் விபத்துக்களுக்கு பாதுகாப்பும் ஏற்படுத்தாமல் பல மாவட்டங்களில் பல தொழிலாளர்களுக்கு கை கால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டும் கண் பார்வை இழந்து வறுமையில் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் தான் இன்றுவரை உள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டு நமது சங்கம் துவங்கியதிலிருந்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பல கோரிக்கைகளுக்காக 12 ஆண்டு காலமாகப் போராடி வருகிறோம்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் எடுத்துரைத்து நமது கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார். இக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சரவணன் மாநில பொருளாளர் பாஸ்கரன் மாநில துணைத்தலைவர் தனபாலன் மாநில துணைச்செயலாளர் தெய்வேந்திரன் மாநில இணைச் செயலாளர் ரவி மாவட்ட பொருளாளர் தர்மராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation