திருச்சியில் தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் முதலாம் ஆண்டு மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், பாலசுப்பிரமணி ஒருங்கிணைப்பில் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10 அம்ச கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் உள்ள மத்திய ஆயுத காவல் படை வீரர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், கொடி நாள் நிதி வசூலிப்பை ராணுவத்திற்கு பிரித்துக் கொடுப்பது போல் துணை ராணுவப் படையினருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும், தமிழக அரசால் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துணை இராணுவ படை வீரர்களுக்கும் வழங்கிட வேண்டும். துணை ராணுவப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி, மருத்துவம் 5% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.