தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 426 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் திருச்சி ஶ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே உள்ள ஜெ ஜெ நகரில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதிதாக கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கினார் இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் ஜே.இமாகுலேட் ராஜேஸ்வரி, உதவி பொறியாளர் ம.சங்கவி, மாநகராட்சி உதவி ஆணையர் கா.ஜெயபாரதி, அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
