மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்காக நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத திருச்சிராப்பள்ளி பயிற்சி கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர்.இறையன்பு கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவ தூதுவர்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு (ANTI DRUG CHAMPION) வில்லைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்:- அதில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்படவும், அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் தனது பொன்னான காலத்தை இழக்கிறார்.

அதோடு மட்டும் அல்லாமல் தனது உடல் நலம் மற்றும் செல்வம் ஆகியவற்றோடு வாழ்நாளையும் இழந்து விடுகிறார். நேரம் மிகவும் முக்கியமானது. அதனை நாம் அனைவரும் மிகச்சரியாகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும்.. அந்த வகையில் நீங்கள் செயல்பட ஆரம்பித்தால் போதை பொருளில்லா திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை உருவாக்கிட முடியும் என மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இக்கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உதவி ஆணையர் உதயகுமார், இந்த கருத்தரங்கில் மருத்துவர் கோவிந்தராஜ் உதவி பேராசிரியர் பாரதி, பள்ளி, கல்லூரி மாணவர்கள்,மாணவ தூதுவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *