சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கடந்த 40 ஆண்டு காலம் பணிபுரிந்த ஓய்வு உயிர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 2000யை முதல்வர் வழங்கி வருகிறார். ஓய்வு பெற்றவர்கள் வாழ்வாதார மேம்பட தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய உறுதி அளித்தார் ஆனால் இன்றுவரை எந்தவித கோரிக்கை நிறைவேற்றி தராததால் கோயம்புத்தூர் முதல் மாநில மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின்படி தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர்கள் பழனி, பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விளக்க உரையை மாவட்ட செயலாளர் சுவாமிநாதன் ஆற்றினார். இந்த கவனம் இருப்பு ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 70850 அகவிலைப்படியுடன் வழங்க கோரியும், குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரியும், மருத்துவ காப்பீடு வழங்க கோரியும், குடும்ப நல நிதி வழங்க கோரியும், பண்டிகை முன் பணம் வழங்க கோரியும், எஸ்பிஎஃப், சிபிஎஃப் ஒட்டுமொத்த தொகை ஓய்வூதியம் பெறும் நாளென்றே வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.