திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி வாழ்த்தினார்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் 100% தேர்ச்சி அளித்த பாட ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். ஒழுக்கமே உயிரினும் மேலானது. மாணவர்களின் சிறந்த பண்புகளுக்கு ஆசிரியர்களோடு இணைந்து பெற்றோர்கள் ஒழுக்கத்தோடு தனது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.” என்று தனது உரையில் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் ஆடிட்டர் வெங்கடேஷ் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.பள்ளி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்புரை ஆற்றி ஆண்டு அறிக்கை வாசித்தார். மேலாளர் குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். விழாவில் கல்லூரியின் ஆலோசகர் , அறிவியல் புல முதன்மையர் முனைவர் மது மற்றும் துணை முதல்வர் முனைவர் உபேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.