உலக நாடுகள் அனைத்தும் எந்தவித போர், சண்டையின்றி உலக அமைதிக்காகவும், நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துவரும் சூழலில், விளைநிலங்கள் குறைந்து விவசாயம் கேள்விக்குறியாகிவரும் நிலையில், விவசாயத்தை பேணிகாக்கவும் வலியுறுத்தி மனிதனுக்காக மகான்இயக்கம் ஸ்ரீ வேலுதேவர் ஐயா அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான 5கிமீ மாரத்தான் போட்டி திருச்சியில் இன்று நடைபெற்றது.

ஸ்ரீ ஸ்ரீ பாம்பாட்டி ஓம்காரகோவில் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ வேலுதேவர் சித்தர், தொன்போஸ்கோ சொசைட்டி அமலாதாஸ், சமூகஆர்வலர் அல்தாப் அஹமது உள்ளிட்டோர் பங்கேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டமானது திருச்சி உழவர்சந்தை சாலையில் இருந்து தொடங்கி, நீதிமன்றம்சாலை, பாரதிதாசன் சாலை, ஒத்தக்கடை, தலைமை தபால்நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் வரை சென்று நிறைவடைந்தது.

14, 17 வயதிற்குட்பட்டோர், 17வயதிற்குமேற்பட்டோர் என 3பிரிவுகளில் திருச்சியில் முதன்முறையாக எந்தஒரு கட்டணமின்றி நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு தலா 10ஆயிரம், 7ஆயிரம், 5ஆயிரம் மற்றும் 20 நபர்களுக்கு 500 ரூபாய் ஆறுதல்பரிசு என ஒரு லட்சம் வரையிலான ரொக்கப்பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்