திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் டிசம்பர் 31 க்குள் முடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது அதனை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் பேர் வருகை தரும்படி இருக்கும். புதிய பேருந்து நிலையம் 430 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது மேலும் புதிய மார்க்கெட் 330 கோடி செலவில் கட்டப்பட்டு தயார் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது. குடமுருட்டியில் இருந்து வயலூர் சோமரசம்பேட்டை சாலையை கடந்து பஞ்சபூருக்கு வரும் சாலை அமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இரண்டும் செயல்படும்.
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள் தஞ்சாவூர் மட்டும் மத்திய பேருந்து நிலையம் செல்லாது, கரூர்,கோயமுத்தூர் செல்லக்கூடிய பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம் வழியாகத்தான் செல்லும். பேருந்து முனையத்தின் வெளியே போடப்பட்டுள்ள சீட் பழுதாகும் என கூறப்படுகிறது என்ற கேள்விக்கு…* பேருந்து நிலையத்தின் வெளியே போட்டுள்ள சீட் 20 வருடம் வாரண்டி கொடுத்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இதேதான் போடப்பட்டுள்ளது, அங்கு கேட்கவில்லை எங்களிடம் கேள்வி கேட்கின்றீர்கள், எந்த பாதிப்பும் ஏற்படாது. மழைநீர் வடியவில்லை எனக் கூறுகிறீர்கள், ஆனால் மழை வந்தால் தான் ஏரிகள் நிரம்பும். ஏரிகளை நிரப்பும் பணியை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஒரு நாள் இரண்டு நாள் சிரமத்தை பார்த்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஏர்களை நிரப்ப நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என கூறினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.