உலக பாரம்பரிய சிலம்பவிளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி – 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் இந்தியா சார்பில் திருச்சியில் இருந்து 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர், சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகள் 16 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை குவித்ததுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கங்களை குவித்து விமானம்மூலம் திருச்சிவருகைபுரிந்த சிலம்ப வீரர்,வீராங்கனைகளுக்கு திருச்சி விமானநிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விளையாட்டுவீரர்கள் திரளாக பங்கேற்று சால்வை மற்றும் மலர்மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பினை அளித்தனர். அதேநேரம் ஏற்காடு, குண்டூர் கிராமத்தில்இருந்து மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவி முதன்முறையாக சிலம்பம்விளையாடி 3 தங்கப்பதக்கம் வென்ற நிலையில் அவருக்கு பலரும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *