திருச்சி மாவட்டம் கூனி பஜார் பகுதியில் உள்ள தூய சவேரியார் கோவில் திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதி தூய மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்பணி சவரிராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி, சகாய ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புனிதரின் கொடி மந்திரிக்கப்பட்டு சிறப்பு திருப்பலியுடன் கொடியேற்று விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து புனித சவேரியார் நவநாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது அதன் ஒரு பகுதியாக டிசம்பர் இரண்டாம் தேதி பங்குத்தந்தை சவரி ராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தை சகாய ஜெயராஜ் ஆகியோரால் புனிதரின் தேர் பவனியானது புனிதப்படுத்தப்பட்டது. இந்த தேர் பவணியை மண்டலம் 4 கோட்டத் தலைவர் துர்கா தேவி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் தேரில் மைக்கேல் சம்மனசும், இரண்டாவது தேரில் சூசையப்பர் மற்றும் கடைசி தேரில் தூய மரியன்னை வீற்றிருந்து பங்கு மக்களுக்கு காட்சியளித்தார் .
அதனைத் தொடர்ந்து பங்கு மக்கள் தேர்களை இழுத்து ஊர்வலமாக சென்றனர். இந்த தேரானது முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது. இந்த தேர் பவணியில் பங்கு மக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் ஆசி பெற்றனர். தூய சவேரியார் ஆலயத்தின் தேர்பவனி விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் அர்னால்டு, துணைத் தலைவர் சின்னப்பன், செயலாளர் ஹென்றி, துணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.