திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் விரிவாக்கத்துறை மற்றும் ஆசிரியர் மாணவ நலச்சங்கம் மற்றும் மனநல மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு மையம் சார்பாக பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கலாச்சார நல்லிணக்கம் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியில் துணை முதல்வர் முனைவர் சத்தியசீலன் தலைமையுறை ஆற்றினார் சி எஸ் ஐ சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் துணை ஆயர் பெனிடிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்மஸ் செய்தியினை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் மேலும் பிற மாநில மாணவர்களுக்கான கலாச்சார போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் மேகாலயா, நாகலாந்து, கேரளா இமாச்சல பிரதேசம் ஜார்கண்ட் ராஜஸ்தான் புதுச்சேரி பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் கலாச்சார நடனம் பாடல்கள் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சத்தியசீலன் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் தலைவர் முனைவர் சுகந்தி ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இவ்விழாவில் விரிவாக்கத்துறையில் புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிறிஸ்டியன், முனைவர் ஷாம் தேவ ஆசீர், முனைவர் கேப்ரியல் துணைபுல முதன்மையாளர்கள் முனைவர் பிரேம் குமார் மற்றும் மாணவர் நல சங்கத்தின் தலைவர் முனைவர் அலெக்ஸ் ராஜ்குமார் பால் ஒருங்கிணைப்பாளர்கள் டேவிட் சாம் பால், தேவசேனா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.