சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் 3 மத்திய சிறைகளுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக பேசிக்கிறாங்க என்று சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார். திருச்சி மத்திய சிறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களை வைத்து மோப்ப நாய்கள் உதவிகளுடன் சோதனை நடைபெற்றது.
இறுதியில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படாததால் இது புரளி என உறுதி செய்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு மத்திய சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக மத்திய சிறைச்சாலையின் உள்ளே கண்காணிப்பாளர் அறை, பார்வையாளர்கள் அறை, சிறைவாசிகள் தங்கி இருக்கும் முக்கிய பகுதிகள், உணவு கூடங்கள் உள்ளிட்டவைகளில் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.