திருச்சியில் டிடிவி தினகரனின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்க வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் 67ல் முன்பு இருந்தது. தற்போது சாத்தியமா என்று தெரியவில்லை. எனவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.வெள்ளம் நிவாரண பணியில் திமுகவின் நடவடிக்கையில் விளம்பரம் தான் இருக்கிறது சொல்லிக் கொள்ளும் அளவு அவரது செயல்பாடு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுகிறார் என்ற கேள்விக்கு அது குறித்து நான் சொல்ல முடியாது நடைபெற்ற பொதுக் குழுவில் நாம் மீண்டும் வெல்வோம் என பேசி இருக்கிறார் என்ற கேள்விக்கு அவர் என்ன வேணும்னாலும் பேசுவார் அவருக்கு தெரிந்ததெல்லாம் துரோகம் தான், அவருடன் சேர்ந்தவர் எல்லாருக்கும் கட்சியினருக்கும் அனைவருக்கும் துரோகம் தான் செய்துள்ளார். திமுக ஆட்சியின் ஆட்சி பொறுப்பில் உள்ளது என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி அவர் தான் காரணம் பாராளுமன்ற தேர்தலில் திமுக 40 தொகுதிகள் வெற்றி பெற்றது என்றால் அது எடப்பாடி தனியாக ஆட்களை நிறுத்தியதால் தான். இரட்டை இலை மறைமுகமாக திமுக வெற்றிக்கு பழனிச்சாமியின் மூலம் உதவியாக இருக்கிறது. இரட்டை இலையை மீட்க்கும் முயற்சிகள் உச்சநீதிமன்றம் சென்று விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவக்கி விட்டோம். ஜனநாயக ரீதியாக நாங்கள் இரட்டை இலையையும் கட்சியையும் மீட்டெடுப்போம். அம்மாவுடைய கட்சி, இரட்டை இலை சின்னம் இன்று பலவீனமாகிவிட்டது. பழனிச்சாமி என்ற சுயநல மனிதரிடம் மாட்டிக் கொண்டு திமுக மறைமுகமாக உதவி செய்வதன் மூலம் வலு இழந்து வருகிறது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.2026 தேர்தலில் அம்மாவின் கட்சிக்கு அவர் முடிவுரை எழுதி விடுவார்கள்.
2026 தேர்தலுக்குப் பிறகு கட்சி இல்லாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்து விடுவார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் கைது செய்யப்படுவோம் என்பதற்காக தன்னை, குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார் 2026பிறகு அவரது உதவி திமுகவுக்கு தேவைப்படாது. தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலு பெறும் திமுக என்ற தீய சக்தி ஆட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மக்களுக்கு நல்ல ஒரு ஆட்சியை கொடுக்கும் என்று உறுதியாக பணியாற்றி வருகிறோம். பொதுவாக குறைந்தபட்சம் 5000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பு அதனை இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை திமுக பிரச்சினை என்றால் திருமாவளவனை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பது ஏன் என்ற கேள்விக்கு திருமாவளவன் தீர்க்கமாய் கருத்தை சொல்லக்கூடியவர் சமீப காலமாக அவருடைய பேச்சு குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது. அந்த கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கின்றது மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் அவரை சேர்ந்தவர்கள் இருந்தவர்கள் பேச்சு திமுகவுக்கு திருமாவளவனுக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை உருவாக்கி வருகிறது. என்னதான் அவர் மறுத்தாலும் நெருப்பில்லாமல் புகையாது கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும் திமுக வை விட பலமான கூட்டணியாக தேசிய கூட்டணி வளமாக அமையும் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்திற்கு நிறைய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து தான் எடப்பாடி பழனிச்சாமி செல்ல வேண்டும். கட்சிக்காரர்களிடமிருந்து அவரை பாதுகாக்க போலீஸார் பாதுகாப்பு தேவை ஆதவ் அர்ஜுனன் குறித்த கேள்விக்கு திருமாவளவன் சரியான முறையில் கையாளவில்லை என தெரிகிறது. முலையிலேயே கிள்ளி இருக்க வேண்டும்
பல்வேறு தடைகளை நான் சந்திக்காத நெருக்கடியா அதை தாண்டி தான் கட்சி நடத்துகிறோம். அப்பொழுது எனது வழக்கு மன்றத்தில் இருந்தது. இப்பொழுது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை பாஜக நிர்வாகிகளோடும் பழகினவரை அம்மாவோட கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அம்மா கட்சி ஒன்றாய் இருக்க வேண்டும் என அப்போது செய்தது பிள்ளையார் பிடிக்க குரங்கு பிடித்தது போல் கதை ஆகிவிட்டதுஅதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பாஜக செயல்படுகிறதா என்ற கேள்விக்குஅது எனக்கு தெரியாது தொண்டர்கள் ஒன்றாக இருப்பதற்கு பழனிச்சாமி தடையாக உள்ளார். விஜய் கட்சி குறித்து கேள்விக்கு எந்த அளவுக்கு ஒரு கட்சி சவால் விடும், எந்த அளவுக்கு அவர் அரசியலில் ஈடுபடுவார் என்பது தேர்தல் தான் முடிவு செய்யும். ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தலில் அனைத்து கட்சியும் சேர்ந்து முடிவு எடுப்போம் பழனிச்சாமி தவறான முடிவு எடுத்ததால் 21, 24 அவர்கள் பலவீனம் ஆகிவிட்டார்.அவருடைய தலைமையில் இரட்டை இலை பலவீனமாகி வருகிறது. அவர் தலைமையில் கூட்டணி என்பது இலங்கை அல்லது ஆந்திராவில் உள்ள கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியும் என தெரியாது.ஈரோடு தேர்தலை பொருத்தவரை பாஜக என்பது அனுபவஸ்தர் உள்ள காட்சி அவர்கள் யோசித்து முடிவு எடுப்பார்கள். பாஜகவுடன் பழனிச்சாமி கூட்டணி வைத்தால் என்ற கேள்விக்கு யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது சூழ்நிலை வரும்போது நான் பதில் சொல்கிறேன் என தெரிவித்தார். இந்த பேட்டின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.