கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல் சமய நல்லுறவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தூய திருத்துவ பேராலயத்தில் நடைபெற்றது. திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மரியாவின் பிரான்சிஸ்கன் தூதரையாளர்கள் சபை மகளிர் மேம்பாடு மற்றும் சமய நல்லிணக்க செயற்பாட்டாளர் ஸ்டெல்லா பல்தசார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பொருளாளர் ஞானபிரகாசம் நன்றியுரை கூறினார்.
மேலும் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு வந்துவான் தமிழ் சுவேச லூத்தரன் திருச்சபை தலைவர் எஸ்தர் வினோதா சாம்ராஜ் திருச்சி தஞ்சை திருமண்டலம் பேராயர் ராஜ மான்சிங் பேராயர்கள் சுதர்சன் ஜான்சன் பச்சரிசி திருச்சி உறையூர் பிரம்ம குமாரிகள் இயக்கம் தேவகி மணப்பாறை பழந்தமிழ் காவிரி அறக்கட்டளை பாலசுப்பிரமணியன் பாலக்கரை ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து செயலாளர் காதர் மீரா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்த கிறிஸ்துமஸ்த்து விழாவில் பாடல்கள் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.