கிறிஸ்துமஸ் தின பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு . கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக இன்று நள்ளிரவு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பல்வேறு முக்கிய தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது.. அதன்படி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெற்றது இந்த கிறிஸ்மஸ் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தங்களின் குடும்பத்தினருடன் தேவாலயத்திற்கு வருகை தந்து சிறப்பு திருப்பலியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.. .