ஆதித்தமிழர் கட்சியின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் பயிற்சி பட்டறை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை மற்றும் செயற்குழு கூட்டம் ஆதி தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சமூக நீதிப் போராளி ஜக்கையன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச் செயலாளர் விஸ்வைக்குமார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பயிற்சி பட்டறைக்கு திருச்சி மத்திய மண்டலத்தில் இருந்து ஆதித்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நிறுவனத் தலைவர் ஜக்கையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: – அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது இந்த உள்இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் அதேபோல் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தப்பட வேண்டும் அதேபோல் தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது இட ஒதுக்கீட்டு முறையை முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் டாக்டர் அம்பேத்கர் அவர்களை பற்றி மிக இழிவான விமர்சனத்தை முன் வைத்த உள்துறை அமைச்சர் அமிஷா அவர்கள் பதவி விலக வேண்டும். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ள கொடூரமான சம்பவம் வெளிவந்திருக்கிறது தமிழக அரசு இதற்கான போஸ் என்று சொல்லக்கூடிய கமிட்டியை வேலை செய்யக்கூடிய கல்வி நிலையங்களில் இந்த கமிட்டி எந்த அளவுக்கு வேலை செய்கிறது கண்காணிக்கின்ற போஸ் கமிட்டி செயல்படுகிறதா குறித்து முறையாக ஆய்வை நடத்த வேண்டும். திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தீண்டாமை வன்கொடுமை இன்று எந்த அளவு இருக்கிறது என்பது குறித்து தமிழக அரசு ஒரு ஆய்வினை நடத்திட வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டிக்கிறோம் இது போன்ற போராட்டங்கள் அநாகரீகமான செயல்களை பொதுவெளியில் செய்தால் கேலிக்கூத்தாக்கும் எனவே அண்ணாமலை அவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆதித்தமிழர் கட்சியைப் பொருத்தமட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் தான் இருக்கிறோம் அந்த கூட்டணி என்பது ஜனநாயகத்தை பிஜேபி போன்ற இந்துத்துவ அரசியலை எதிர்ப்பதற்காக நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது உல்லாச தேர்தலை நடத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் எங்களுக்கான இடங்களை கேட்டுப் பெறுவோம். சட்டமன்றத்தில் அருந்ததியதற்கான இட ஒதுக்கீட்டை திமுக அரசு அளிக்க முன் வர வேண்டும். இன்றைக்கும் பல இடங்களில் தீண்டாமை கொடுமை என்றும் ஊர் வேராக பேர் வேறாக தான் இருக்கிறது இயல்பாக ஒரு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டால் கூட அவர்களை ஆணவ படுகொலை செய்கின்றனர். அதிலும் தமிழ்நாடு தான் ஆணவ படுகொலையில் நம்பர் ஒன் ஆக இருக்கிறது ஆகவே தமிழக அரசு தீண்டாமை வன்கொடுமை குறைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கான சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் முறையான கண்காணிப்பு குழுக்களை அமைத்து மாவட்டம் தோறும் ஆய்வுகள் நடத்தி தீண்டாமை வன்கொடுமை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். குறிப்பாக திராவிட மாடல அரசு கண்டிப்பாக தீண்டாமை ஒழிப்புக்கான நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் என ஆதித்தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *