தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப் பட்டுவருகிறது, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் வீட்டில் முன் இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வருவது வழக்கம்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை தமிழக மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இதேபோல தமிழகம் முழுவதும் பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.