திருச்சி உறையூர் மண்டல பாஜக சார்பில் மூன்றாம் ஆண்டு “மோடி பொங்கல் விழா” வாமடம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு உறையூர் மண்டல தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக பாஜக பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பொது மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார். இதில் பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து பிரிந்த 50 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில்… தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து அவர்களது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் திருப்தி இல்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரிந்து பல்வேறு கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தற்போது 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கள் பெரியார் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்பது குறித்து விவாதம் செய்ய ஏதுவாக உள்ளது. இதன் மூலமாக பெரியார் என்ன செய்தார் என்பது தெரியவரும் எனக்கூறினார்.