திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். முன்னதாக காளையர்களும், காளைக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு போட்டியில் களம் காண அனுமதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான அறிவிப்புகளை வெளியிடும் மேடை, பாா்வையாளா் மாடம், மாடுபிடி வீரா்கள்-பாா்வையாளா்களுக்கு முதலுதவி மருத்துவ மையங்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான முதலுதவி மையங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பாா்வையாளா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தமிழக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட்டு இருக்கின்றன.
நவலூர் குட்டப்பட்டு அடைக்கல மாதா ஆலயம் முன்னதாக உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் காளையர்களுக்கும் வீட்டு உபயோக பொருட்கள் கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. மிக முக்கியமாக வெற்றி பெறும் காளை மற்றும் காளளையர்களுக்கும் தென்னங்கன்று வழங்கப்பட்டு வருகிறது. இப் போட்டியில் 600 காளைகள் 400 மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்குகின்றனர். திருச்சி மாநகரக் காவல்துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை நவலூா் குட்டப்பட்டு கிராம மணியக்காரா்கள், பட்டையதாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊா்ப் பொதுமக்கள், இளைஞா் மன்றக் குழுவினா், நவலூா் குட்டப்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமத்தினரும் செய்து வருகின்றனா்.