ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் வடபத்ர காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது கோவில் கடந்த சில தினங்களாக கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு புதிய கோபுரங்கள் கட்டும் பணி நடைபெற்றது அதன் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அதற்கான கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது..கும்பாபிஷேக விழாவிற்காக திருமஞ்சனம் எனப்படும் 1008 தீர்த்த குடம் வட காவேரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மேல தாளம் முழங்க ஊர்வலமாக கடந்த 17ஆம் தேதி அன்று எடுத்து வந்தனர்…
அதனை தொடர்ந்து அன்று மாலை முதல் கால யாக சாலை பூஜை நேற்று 2 மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜை 19ஆம் தேதி இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது பின்னர் மேளதாளம் உலக புனித நீர் குடங்கள் புறப்பட்டு கோவில் ராஜகோபுரம் மூலஸ்தான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலஸ்தானத்தில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இந்த நிகழ்வில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்..