தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தலின்படி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிமுக கழக இலக்கிய அணி செயலாளர், கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன், கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் துரை திருஞானம், திருச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில்:- திமுக ஒருமுறை ஆட்சி அமைத்தால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியை அமைத்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர், அம்மாவை தொடர்ந்து மீண்டும் அந்த சாதனையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் படைக்க இருக்கிறார். எனவே கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வருகிற 2026 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்