திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா வருகிற ஜனவரி 28-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பெருந்திரளணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் சுமார் 2400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
இப்பேரணியானது திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கிலிருந்து தொடங்கி ஜமால் முகமது கல்லூரி வழியாக டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் சென்று மீண்டும் டி.வி.எஸ் டோல்கேட், வழியாக அண்ணா விளையாட்டரங்கில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாணவ, மாணவிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரணியர் இயக்கம் பெருந்திரளணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இப்பேரணியில் மாணவ, மாணவிகளுடன் பங்கேற்றனர்.