திருச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திமுக கழகத்தின் முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயம் முன்பு உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட மாநகர நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.