திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்பி ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், கவுன்சிலர் அம்பிகாபதி, மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின்,
திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சசிகுமார், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான், மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி மற்றும் அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.