தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பாபநாசம் வேலு தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரி மற்றும் கிடங்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்கத் துறையினர் சோதனை இட்டதால் அனைத்து அரசு மணல் குவாரிகளும் கிடங்குகளும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இதனால் மணலோடு எடுப்பதற்கு என்று வடிவமைக்கப்பட்ட சுமார் 20,000 மேற்பட்ட லாரிகள் மற்றும் 5000-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் இயக்கப்படாமல் வேலை வாய்ப்பு இழந்து காணப்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வாதார மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மணல் குவாரி இயங்காதால் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலையில் செயற்கை மணல் எம் சாண்ட் மற்றும் பி சாண்டு உற்பத்தியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தனர். மேலும் எம் சாண்ட் மற்றும் பி சாண்டு உடன் கிரஷர் பவுடர் கலந்து விற்பனை செய்தனர் இதனால் பொதுமக்களின் கட்டிடங்களும் அரசு கட்டுமானங்களும் உறுதி தன்மையில்லாமல் இருக்கிறது மேலும் மணல் லாரி உரிமையாளர்கள் ஆகிய நாங்கள் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வாங்கிய கடனை கட்டாமலும் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி படிப்பை கொடுக்க முடியாமல் மிகவும் திண்டாடி வருகிறோம்.
இதனால் கடனை திரும்ப செலுத்த இயலாத சூழ்நிலை சில லாரி உரிமையாளர்கள் லாரிகளை பைனான்ஸ் நிறுவனமே எடுத்துச் சென்று விடுகிறது மேலும் சில லாரி உரிமையாளர் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மாடுகளுக்கு தீவனம் வைக்க கூட காசு இல்லாத சூழ்நிலையில் மாடுகள் பட்டினி கிடந்து இறக்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது எனவே எங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது:- இந்த நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து மண லாரி உரிமையாளராக நல சங்கத்தின் நிர்வாகிகள் விழுப்புரம் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.