ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் தொழிலாளர் சட்ட திருத்தத் தொகுப்புகளை திரும்ப பெற மறுப்பதை கண்டித்தும். குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 2000 தர மறுக்கும் மேலும் பெட்ரோல் டீசல் உட்பட அனைத்து விதமான உணவுப் பொருட்கள் அத்திவாசிய பொருட்கள் கட்டுப்படுத்த வேண்டும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கும் போது மத்திய மாநில அரசுத்துறை துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
கார்ப்பரேட்டின் காலடியில் அமர்த்தும் பட்ஜெட்டை கண்டித்தும் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்திற்கு டி குறைப்பை கண்டித்தும் இன்சூரன்ஸ் நிறுவனம் உட்பட 10 லட்சம் கோடி பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், ஏஐசிசிடியு ஞானதேசிகன் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷத்தை எழுப்பினர்.