தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 8 வது மாவட்ட மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார் மேலும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்கா தாரணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இம் மாநாட்டில் பல்வேறு துறைகளில் நேரடி பணி நியமனத்தை தவிர்த்து பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். பிற துறை பணிகளை நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய ஊழியர் கட்டமைப்பு ஏதும் இல்லாமல் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ள ஆணையிடவதை உடனடியாக கைவிட வேண்டும் ப

ழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து 9 மாதங்களில் அறிக்கை தர குழு அமைத்து தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர் மேலும் மாவட்ட அளவில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலி பணியிடங்களாக உள்ள இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை கோரிக்கைகளை முன் வைத்தனர் இதில் மாவட்டத் துணைத் தலைவர் ஜான் பால் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து வட்ட கிளை மற்றும் நகர கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்