திருச்சி மாவட்ட உள்ளூர் தொலைக்காட்சியான TEN Tv, மற்றும் தினசூரியன் நாளிதழில் பணியாற்றிய முன்னாள் செய்தியாளரும், VIP Videos உரிமையாளரும், முன்னாள் தமிழன் டிவி கேமராமேன் விஜயகுமாரின் அண்ணனுமான VIP ஜெய் என்கிற ஜெய்குமார் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி பொன்னையா ஸ்கூல் அருகே உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 10-02-2025 அன்று இரவு 9.00 மணி அளவில் உடல்நலக் குறைவு காரணமாக இறைவன் அடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அவரது உடல் திருச்சி பொன்னையா ஸ்கூல் அருகே இருதயபுரம் தோப்பு தெருவில் உள்ள அவரது சகோதரர் விஜயகுமாரின் வீட்டில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை 11-02-2025 மாலை 4  மணி அளவில் திருச்சி வேர்ஹவுஸ் கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை செய்து நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவிற்கு “தமிழ் முழக்கம்” சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *